தாரள பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம்!

1

‘தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். அசாதாரணமான இந்த காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.
ஷைன் சில்டரன் ஹோம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாக இருக்கிறார்.
தான்யா ஹோப்பின் இந்த தன்னலமற்ற சேவைக்கு பல்வேறு தரப்பிடமிருந்து பாராட்டு குவிந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.