என்.இராமசாமியின் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி உரிமைக்குரல்

சங்கத்தை மீட்டெடுப்போம்..

39

தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக் கொருமுறை புதிய நிர்வாகி களுக்கான தேர்தல் நடக்கிறது 2020-2022 தேர்தலுக்கான தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் நடக்கிறது. புதிய நிர்வாகி களுக்கான தேர்தலில் என்.ராம சாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப் பாளர்கள் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது. இந்த அணியினர் இன்று பேட்டி அளித்தனர்.
போட்டியிடும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் விவரம் வருமாறு:
தலைவர் பதவி:
என்.இராமசாமி (எ) தேனாண்டாள் முரளி
துணைத் தலைவர்கள்: (2 பதவி)
சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், ஆர்.கே.சுரேஷ்
கவுரவ செயலாளர்கள்: ( 2 பதவி)
ஆர்.ராதாகிருஷ்ணன்
கே.ஜே.ராஜேஷ்
பொருளாளர்:
எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்
செயற்குழு உறுபினர்கள்: (21 பேர்)
1)  அழகன் தமிழ்மணி
2)  ஆர். மாதேஷ்
3)  கே.பாலு
4)  ஆர்.வி.உதயகுமார்
5) என்.விஜயமுரளி
6) எஸ்.சவுந்திர பாண்டியன்
7)  கே.ராஜ் சிற்பி
8) வி.பழனிவேல்
9) ஏ.எல்.உதயா
10) கி.எம்.டேவிட் ராஜ்
11) ராஜேஸ்வரி வேந்தன்
12) எம்.எஸ்.சரவணன்
13) எஸ்.தணிகைவேல்
14) டி.தங்கம் சேகர்
15) எஸ்.வி.ஜெயபிரகாஷ்
16) ஜி.மணிகண்டன்
17) ஜே.சுரேஷ்
18) ஜெ.சண்முகம்
19)எஸ்.ராமசந்திரன்
20)நீல்கிரீஸ் ஏ.முருகன்
21)முத்து


தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டி யிடும் என்.இராமசாமி (எ) தேனாண்டாள் முரளி கூறியதா வது:
கொரோனா காலத்தில் சங்கத் தில் நடக்கும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் வாய்ந்தவர்கள் நிர்வாகிகள் பதவிக்கு எங்கள் அணியில் நிற்கின்றனர். தயாரிப்பாளர்கள் கொரோனா காலத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் நலன் காப்பதற்காக சுய நலமில்லாமல் எங்கள் அணி செயல்படும். தியேட்டர்கள் விபிஎஃப் கட்டணம் கட்டக் கூடாது என்பது எங்கள் அணியின் முடிவு. அதை தியேட்டர் அதிபர்கள். விநியோகஸ்தர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். நாங்கள் வெற்றி பெற்றால் சங்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்களுடன் மீண்டும் பேசி தாய் சங்கமான எங்கள் சங்கத்துடன் சேர்த்து ஒற்றுமையாக செயல்பட வைக்க பாடுபடுவேன். சங்கத்தை மீட்டெடுத்து அனைத்து தயாரிப்பாளர் களும் நல்வாழ்வு பெற எங்கள் அணி உழைக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு என்.இராமசாமி கூறினார் .

சிவசக்தி பாண்டியன் பேசும் போது,’மறைந்த அண்ணன் ராமநாராணன் இந்த சங்கத்தில் 5 வருடம் தலைமை பொறுப் பிலிருந்து சிறுபட தயாரிப்பா ளர்கள் நலனுக்காக பல அரும் பணிகளாற்றினார். அவரது மகன் என்.இராமசாமி தலைமையில் நாங்கள் தயாரிப் பாளர்கள் நலனுக்காக உழைக்க தயாராக இருக்கி றோம்’ என்றார்.
ஆர்.கே.சுரேஷ் பேசும்போது. ’தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி என்று இந்த அணிக்கு பெயர் வைத்ததிலி ருந்தே தயாரிப்பாளர்கள் நலன் காப்பதில் இந்த அணிக்கு எவ்வலவு அக்கரை உள்ளது என்பது அனைவருக்கும் புரியும்’
ராதாகிருஷ்ணன் பேசும் போது,’ சங்கத்தை நல்ல முறையில் வழி நடத்திய மறைந்த தலைவர்கள் கேஆர்ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் ஆசியுடன் எங்கள் அணி போட்டியிடு கிறது. இந்த அணி இந்த முறை மட்டுமல்ல இன்னும் 5 ஆண்டுக்கு தேர்வு செய்யப் பட்டு தயாரிப்பாளர்களுக்கு சேவை செய்யும்’ என்றார்.
சந்திரபிரகாஷ் ஜெயின் பேசும் போது.’ சங்கம் நல்ல முறை யில் செயல்பட்டபோது இங்கு தான் இருந்தேன். இடையில் சில காலம் ஒதுங்கி இருந்த போது சங்கத்தில் என்னேன்ன நிகழ்வுகளோ நடந்துவிட்டது. இனியும் ஒதுங்கி இருக்கக் கூடாது. சங்கத்துக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டியிடுகி றேன்’ என்றார்.
செயற் குழு உறுப்பினர்கள் வினர் சார்பில் அழகன் தமிழ் மணி பேசினார். அவர் கூறும்போது,’இந்த சங்கம் தாய் சங்கம். இதை நல்ல முறையில் வழிநடத்தி செல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். அனை வரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்’ என்றார்.
முடிவில் விஜயமுரளி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நலன் காக்கும் அணி 3 பக்க தேர்தல் அறிக்கை வெளியிட்டது, அதில் ’தொடர்ந்து 25 வருடங்கள் சந்தா கட்டி வந்த நிறுவனங்கள் ஆயுள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க உங்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றுவோம், சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க உறுதியான நடவடிக் கை எடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறு திகள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.