பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் !

20

பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ( Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ள “மாறா” திரைப்படம் ரசிகர்களிடம் ஆரவார வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தில் முன்னணி நடிகர்களின் நடிப்பு, மனதை மயக்கும் இசை, அட்டகாச விஷுவல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற வேளையில், படத்தின் கலை இயக்கம் தனித்த அளவில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கண்ணுக்கினிய பழமையான கட்டிடங்கள், அதில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்ட ஓவியங்கள், சிறு சிறு பொருட்களின் கலை வடிவங்கள், தனித்த பாராட்டை பெற்று வருகின்றது. அனைவரும் வியந்து பாராட்டும் இந்த கலை இயக்கத்தின் பின்னணியில் இருப்பவர் அஜயன் செலிசேரி ஆவார். கலை இயக்கத்தை தாண்டி “மாறா” படத்தில் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத்துடன் அவரது நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கலை இயக்கம் நடிப்பு என இரண்டு துறைகளிலும் திறமை கொண்டவர்களை திரையுலகில் காண்பது அரிது. “மாறா” படத்தில் இரண்டு துறைகளுக்குமாக பாராட்டுக்கள் குவிந்து வருவதில் அஜயன் செலிசேரி பெரும் உற்சாகத்தில் உள்ளார். தமிழ் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவரது கலை இயக்கம் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அஜயன் செலிசேரி ஏற்கனவே மகேஷிண்ட பிரதிகாரம், பறவ, வரதன் மற்றும் ட்ரான்ஸ் படங்கள் மூலம் கலைஇயக்கத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். அவரது அடுத்த படங்களான பகத் பாசிலின் “இருள்”, சந்தோஷ் சிவனின் “ஜாக் & ஜில்”, மஞ்சு வாரியரின் “9எம் எம்” படங்கள் அவரது ரசிகர்கர்களுக்கிடையே அவரது மேஜிக்கை காண, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.