முதல் ‘டைம் லூப்’ படம்

17

அறிமுக நாயகன் சதிஷ்குமார் நடிக்கும், ‘ஜாங்கோ’ படத்தை மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இவர் முண்டாசுபட்டி படத்தில், இணை இயக்குனாராக பணியாற்றினார். இப்படத்தில் மிருணாளினி ரவி, அணித சம்பத், கருணாகரன், டேனியல்போப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்து உள்ளார்.

படம் குறித்து, இயக்குனர் மனோ கார்த்திகேயன் கூறியதாவது:

நாட்டில் முதல், ‘டைம் லூப்’ படம் இது.அதாவது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒருவனது வாழ்க்கை சிக்கிக்கொண்டு, மீண்டும் அந்த கால இடைவெளிக்குள்ளேயே வாழ்வது தான், டைம் லூப். தொடர்ந்து, ஒரு நாள் சம்பவத்திலேயே வாழும் நாயகன், அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே படம். ஜாங்கோ என்றால், ‘மீண்டும் எழு’ என, அர்த்தம் இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.