இன்று அனைவராலும் பாராட்டப்பெறுகிற ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ திரைப்படமும், அப்படத்தின் இயக்குனரும் கடந்து வந்த பாதை அத்துனை சுவாரஸ்யமானது. எவரும் முதல் படத்திலேயே மிகச்சிறந்த இயக்குனராக மதிப்பிடப்படுவதில்லை. சிறந்த டைரக்ஷன், காட்சி மொழியில் கதை சொல்லுதல், தொழில்நுட்பத் தரம் மிகுந்த படம் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற ஜியோ பேபியின் முதல் குறும்பட அனுபவத்தைக் கேட்டுப் பாருங்கள்.
இனிமேல் தனக்கு சினிமாவே வேண்டாம், நான் சினிமா இயக்கத் தகுதியான ஆள் இல்லை, எனக்கு சினிமாவே வராது என்ற எண்ணத்தைத்தான் அவரது முதல் குறும்படம் தந்திருக்கிறது. இருப்பினும், எப்படி, எந்த வழிகளின் மூலம் சினிமா மொழியைக் கற்றுக்கொண்டார், சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்பதை இந்த நேர்காணலின் வழி அறியலாம். மேலும் அவர் தமிழிலேயே பேசுவதால், இன்னும் எளிமையாக அந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ப்யூர் சினிமா சேனல் இயக்குனர் ஜியோ பேபியோடு நடத்திய மிக நீண்ட நேர்காணலின் முதல் பகுதி.