சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்பட குழுவினர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. ஒன்னு ரெண்டு பேருமே உச்சத்துல இருப்போம்.. இல்லேன்னா ரெண்டுபேருமே சிக்கல்ல இருப்போம்.. சிம்பு பான் இந்தியா படம் பண்ணனும்.. அதுக்கு மாநாடு ஒரு ஆரம்பமா இருக்கும்.. கொரோனா தொற்றால பாதிக்கப்பட்ட சமயத்துல கூட படத்தோட கேமராமேன் வந்து வேலை பார்த்தாரு. அதைவிட ஆச்சர்யம் அவரை சிம்பு கட்டிப்புடிச்சு பாராட்டுனாரு.. கல்யாணி பிரியதர்ஷனை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு மாடர்ன் ரேவதி தான் ஞாபகத்துக்கு வருவாங்க… வெங்கட்பிரபு கிளாசா படம் எடுக்கிறவரு.. அவருகிட்ட நம்ம கரகாட்டக்காரன் ஆடியன்ஸையும் சந்தோஷப்படுத்தணும் மறந்துறாதீங்கன்னு சொன்னேன்” என்றார்.