கொரோனா 2ம் அலை பரவலை தடுக்கவும், 3ம் அலையை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. இதையடுத்து சினிமா தியேட்டர்களும் பல மாதங்களாக மூடிக் கிடக்கிறது.
இந்நிலையில் தியேட்டர் சங்க நிர்வாகிகள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணி யத்தை சந்தித்து முதல்வருக்கு பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.