திட்டம் இரண்டு (பட விமர்சனம்)

77

படம்: திட்டம் இரண்டு (பிளான் பி)

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ்,  சுபாஷ் செல்வம்,  முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, பாவல் நவகீதன்,  அனன்யா ராம்பிரசாத்,

இசை: சதீஷ் ரகுநாதன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

தயாரிப்பு:  தினேஷ் கண்ணன், வினோத் குமார்

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

ரிலீஸ்: சோனி லைவ்

பணியில் சேர்வதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ் பஸ்ஸில் பயணம் புறப்படுகிறார். அங்கு அறிமுகமாகும் சுபாஷ் ஐஸ்வர்யாவுக்காக தனது இடத்தை விட்டுக்கொடுக்கிறார். அவரது நல்ல குணத்தை கண்டு மனதை பறிகொடுக்கிறார் ஐஸ்வர்யா. பஸ் சந்திபொபு முடிந்து  மீண்டும் சுபாஷை போலீஸ் நிலையத்தில் சந்திக்கிறார். இருவரின் நட்பும் நெருக்கமாக தொடர்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கல்லூரி தோழி சூர்யா திருமணம் ஆகி சில மாதங்களில் காணாமல் போய்விட்டார் என்பதை அறிந்து அதுபற்றிய விசாரணையில் ஈடுபடுகிறார் ஐஸ்வர்யா. சூர்யா இறந்துவிட்டார், கொல்லப்பட்டார், உயிருடன் இருக்கிறார் என்ற பல தகவல்கள் ஐஸ்வர்யாவை குழப்புகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலன் சுபாஷ்தான் சூர்யா என்ற உண்மை தெரியவர அதிர்ச்சி அடைகிறார் ஐஸ்வர்யா. இந்த குழப்பத்துக்கு விடை சொல்கிறது திட்டம் இரண்டு.

காதலுடன் கிரைம் த்ரில்லர் கதையாக இயக்கி இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். போலீஸ் வேடம் என்றதும் தாம்தூம் என்ற அதட்டல் காட்டாமல் அளவான நடிப்பை வழங்கி கவர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனது தோழி இறந்துவிடாரா, கொல்லப்பட்டாரா. உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூட மறந்துவிடுவது தோழியின் மீது அவர் காட்டும் நேசத்தை உணர்த்துகிறது.

தன்னை காதலிக்கும் சுபாஷ்தான் தனது தோழி சூர்யா என்ற நம்பமுடியாத விஷயத்தை அறிந்து அதிர்ச்சி அடைவது ஐஸ்வர்யா மட்டுமல்ல ஆடியன்ஸும்தான்.

மாற்றுத்திறானாளி மீது கொலை பழியை திருப்பி கதையை திசை மாற்றி கொண்டு செல்லும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சஸ்பென்சை எப்படி தக்க வைப்பது என்ற விஷயத்தை சரியாக கையாண்டிருக்கிறார். டாக்டர், அவரது மாஜி காதலி கதாபாத்திரங்களும் கதைக்கு வலு சேர்க்கிறது.

மாற்று திறனாளி போல் நடித்திருக்கும் பாவல் நவகீதன் எதிர்பாராத திருப்புமுனை.

கோகுல் பினாய்  கேமரா  காட்சிகளை சூழலுக்கு ஏற்ப படமாக்கி இருக்கிறது. சதீஷ் ரகுநாதன் இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாதது நிறைவு

திட்டம் இரண்டு –  நுணுக்கமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.

Leave A Reply

Your email address will not be published.