விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: பிரேமலதா கண்டனம்..

மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

27

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் பிரபல நடிகர் விஜய் சேதுபதி. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுப திக்கு கோரிக்கை விடுத்தனர்.  இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.

பின்னர் முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில்  தனது வாழ்க்கை கதையான 800 படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி விஜய் சேதுபதியை கேட்டுக் கொண் டார். அதையேற்று விஜய்சேதுபதி ’நன்றி வணக்கம்’ சொல்லி விட்டு படத்திலிருந்து விலகி னார்.

இந்த நிலையில் யாரோ ஒருவர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து டிவிட்டர் மெசேஜ் பகிர்ந்துள்ளார். அதைக் கண்டு விஜய்சேதுபதி ரசிகர்கள் கோபம் அடைந் தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து  போலீசார் சமபந்தப்பட்ட நபரை  கண்டுபிடித்து விசாரித்து வழக்கு பதிவு செய்தனர்.

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த் கூறும்போது,’தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து பலாத்கார  மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும  பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.

திரைப்பட பாடகி சின்மயி ஒரு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட மெசேஜில், ‘கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத் தில் இருக்கும் பாலியல் குற்ற வாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்ப வனும் குற்றவாளி தான்’ என் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.