சந்தானம் படம் உள்ளிட்ட 3 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்

86

வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 7 மாதமாக  பூட்டப்பட்ட தியேட் டர்கள் நேற்று மீண்டும் திறக் கப்பட்டன.  புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்கனவே வெளியான  படங்களை திரையிட்டனர்.
தீபாவளிக்கு புதிய பட ரிலீஸ் திட்டமிடப்பட்டிருகிறது. முன்னதாக தியேட்டர்களில் விபிஎப் கட்டணம் செலுத்தி புதிய படங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம். அந்த கட்டணத் தை முற்றிலும் ரத்து செய்தால் தான் தியேட்டர்களில் படங் கள் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித் தனர். இது சிக்கலை ஏற்படுத் தியது. தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடை யே ஏற்பட்ட மோதலால் தீபாவளிக்கு படங்கள் வெளி யாகாது என்று கருதப்பட்டது. இதற்கிடையில் விபிஎப் கட்டணத்தை 2   வாரங்க ளுக்கு ரத்து செய்வதாக அறிவித்தது.​

இதை யடுத்து சந்தனத்தின் ‘பிஸ்கோத்’ மற்றும் சந்தோஷ் பி ஜெயகுமாரின் ‘இரண்டாம் குத்து’,அமுத வாணன் இயக்கிய கோட்டா ஆகிய படங்கள் தீபாவளிக்கு  வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த தயாரிப் பாளர்களால் வெளியிடப்பட் டது.

இரண்டம் குத்து’ படம் தணிக்கை குழுவில் ‘ஏ’ சான்றும், சந்தானம் நடித்துள்ள  ‘பிஸ்கோத்’ ‘யு’ பெற்றது.
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ‘இரண்டாம் குத்து’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள் ளார், மேலும் இதில் டேனியல் அன்னி போப், மீனல், ஷா ரா, அக்ரிதி சிங் மற்றும் மொட் டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


ஆர் கண்ணன் இயக்கிய சந்தனத்தின் ‘பிஸ்கோத்’ ஒரு காதல் நகைச்சுவைத் திரைப் படம், இதில் தாரா அலிஷா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த தீபாவ ளிக்கான வெளியீட்டிற்கு ‘பிஸ்கோத்’ மற்றும் ‘இரண் டாம் குத்து’ ஆகியவை தயாராகி வருவதால், தயாரிப் பாளர்கள் புதிய டிரெய்லரை வெளியிடுவார்கள் என்று இப்போது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

கோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன்.


ஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.

 

Leave A Reply

Your email address will not be published.