தூநேரி (திரைப்பட விமர்சனம்)

13

படம்: தூநேரி
நடிப்பு: ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியாஸ்ரீ, மரியா சார்ம், அஷ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார்
இசை: கலையரசன்
ஒளிப்பதிவு: கலேஷ் & அல்லென்
தயாரிப்பு: ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம்: சுனில் டிக்ஸன்

மனைவி, மகள், மகன் என அளவான குடும்பத் துடன் வாழும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் அடிக்கடி இடமாற்றாலக்கப்பட்டு வேறு ஊர்களுக்கு டிரன்ஸ்பர் செய்யப்படுகிறார். சென்னையிலிருந்து அவருக்கு காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்துக்கு டிரான்ஸ்பர் தரப்படுகிறது. அங்கு புறப்படும் முன் ஒரு குழந்தையை சித்தி கொடுமையிலிருந்து மீட்பதுடன் அந்த பெண்ணை எச்சரித்துவிட்டு செல்கிறார். கிராமத்து போலீஸ் நிலையத்தில் சார்ஜ் எடுக்க வரும் நிவின் கார்த்தி குடும்பத் தினரை தனி வீட்டில் குடியேற்றுகிறார். அந்த வீடு பெரியதாக இருந்தாலும் அச்சம் படரும் வகையில் இருக்கிறது. வீட்டுக்கு எதிரிலேயே சுடுகாடு என்பதால் குழந்தைகளும் பயப்படு கின்றனர். வேறு வீட்டுக்கு குடியேற வேண்டும் என்று மனைவி குழந்தைகள் சொல்ல அவர்களுக்காக வேறு வீடு பார்க் கிறார். ஆனால் ஏற்கனவே இருக்கும் வீட்டைவிட மற்ற வீடுகள் மோசமாக இருப்ப தால் பழைய வீட்டிலேயே தங்க முடிவு செய்கின்றனர், போலீஸ் நிலையத்தில் சென்று பழைய குற்றவாளிகள் பற்றி விசாரிக்கும் போது கருப்பசாமி பற்றி கேள்விப்படுகிறார். ஆவியாக திரிந்து பலரின் உயிரை காவு வாங்குவதாக ஊர் மக்கள் சொல்கின்றனர். அடிக்கடி கொலை சம்பவங் களும் நடக்கிறது. உண்மையில் கொலை செய்வது கருப்பசாமி ஆவியா என நிவின் கார்த்திக் விசாரிக்க தொடங்குகிறார். இந்நிலையில் நிவின் குடும்பத்தினரையே பேய் கொல்ல முயல்கிறது. பேயின் பிடியிலிருந்து நிவின் குடும்பம் தப்பியதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
நிவின் கார்த்திக் ஸ்டிரிக்ட்டான போலீஸ் அதிகாரியாக வருகிறார். தன் மகளுடன் படிக்கும் மாணவி, சித்தியின் கொடுமைக்கு ஆளாவதை அறிந்து அவரது வீட்டுக்கே சென்று கண்டிப்பதும், போலீஸ் நிலையத் துக்கு வரவழைத்து கண்டிப்பதும் கதைக்கு முக்கிய புள்ளி என்பது கிளைமாக்ஸில் தெரிகிறது.
அடர்ந்த காட்டு பகுதியில் கண்ணாடி ஜன்னல் களால் அமைக்கப்பட்ட வீடு அதன் எதிர்லே யே சுடுகாடு என்று கற்பனை செய்து பார்த்தலே திகில் கிளம்பும். அந்த வீட்டில் நிவின் தனது மனைவி இரண்டு குழந்தை களுடன் தங்குவது என்பது திகிலை டபுள் ஆக்குகிறது.
திடீரென்று வீட்டில் பேய் நடமாட்டத்தை காட்டி மேலும் பயம் கிளப்பும் இயக்குனர் கிளைமாஸில் ஒன்றுக்கு இரண்டுபேய்களை காட்டி இரண்டும் மோதிக்கொள்வதை படமாக்கி அதிர்ச்சி தருகிறார்.
கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான பாணியிலிருந்து மாறி மாற்பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார். தன்னை திட்டுபவர்களை அடித்து துவம்சம் செய்வதும் இறந்து ஆவியான பிறகு பிள்ளை பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்கிறார்.
நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ கணவன் மற்றும் குழந்தைகள் மீது அன்பை பொழிவதும் அவர் மீது பேய் இறங்கிய பிறகு குழந்தைகளை கொல்ல முயல்வது என தன்பங்குக்கு பயமுறுத்துகிறார். குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது. பேய் துரத்தும்போது அவர்கள் தப்பி ஓடி ஒளிவது பரபரப்பு.
கலேஷ் அல்சன் ஒளிப்பதிவு கதையின் மிரட்சியை கடைசிவரை தக்க வைக்கிறது. கலையரசன் இசை  அருமை.

இயக்குனர் சுனில் டிக்ஸன் கதையை திசை திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தை சஸ்பென்ஸாக சொல்லி இருக்கிறார்.

தூநேரி – சஸ்பென்ஸ் த்ரில்லர்.

By- க.ஜெயச்சந்திரன்

Leave A Reply

Your email address will not be published.