இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் இன்று நடந்தது

தமிழ்நாடு முதல்வர் நேரில் வாழ்த்து

0

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான .உதயநிதி ஸ்டாலின்  இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில் மணமகன் தந்தை பி.தாமோதரன், டி.பத்மா, மணமகள் தந்தை ஷங்கர், எஸ்.ஈஸ்வரி கலந்துகொண்டு முதல்வரை வரவேற்றனர்.

கொரோனா என்ற இந்த பெருந்தொற்று படிப்படியாக குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Wedding Reception) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.