முதல்வர் தாயார் மறைவுக்கு பட தயாரிப்பாளர்கள் அஞ்சலி

21

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. தவுசாயம் மாளுக்கு பழனி சாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர்.

தாயார் உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர், மக்களுடன் நடந்தே சென்று இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

 


இந்நிலையில் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர் களின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர் தமிழ்த் திரைப்பட நடப்பு  தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள்  டி. ஜி. தியாகராஜன், தனஞ்செயன், டி. சிவா, லலித் குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
முன்னதாக காலையில் நடிகர் பிரபு முதல்வர் தாயார் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.