அவ்வை டி.கே.சண்முகம் காலமான தினம் இன்று!

13

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த புத்தன்சந்தையில், 1912 ஏப்., 26ல் பிறந்தவர், டி.கே.சண்முகம். இரண்டாம் வகுப்பு வரை பயின்றவர், நாடக சபாக்களில் சேர்ந்து, நாடகங்களில் நடித்தார். அவ்வையார் வேடத்தில் ஜொலித்ததால், ‘அவ்வை சண்முகம்’ என்றழைக்கப்பட்டார்.

தன் சகோதரருடன் இணைந்து, பால சண்முகானந்த சபாவை துவக்கினார். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்தினர். தேசபக்தியை ஊட்டிய இவரது நாடகம் சிலவற்றிற்கு, ஆங்கிலேய அரசு தடை விதித்தது. கப்பலோட்டிய தமிழன், மனிதன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது முயற்சியால், 1950-ல் நாடகக் கழகம் துவக்கப்பட்டு, அதன் முதல் தலைவராகவும் செயல்பட்டார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக, 1968-ல் நியமிக்கப்பட்டார். ‘நாடகக் கலை’ உட்பட சில நுால்கள் எழுதியுள்ளார். ‘நாடக வேந்தர், பத்மஸ்ரீ’ உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1973 பிப்., 15ல், தன், 61வது வயதில் உயிரிழந்தார்.அவ்வை டி.கே.சண்முகம் காலமான தினம் இன்று!

Leave A Reply

Your email address will not be published.