ரங்கசுவாமி நடராஜ முதலியார் 50வது ஆண்டு நினைவு நாள் இன்று

1

தென்னிந்தியாவின் முதல் சலனப் படத்தைத் தயாரித்த தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் எனலாம்

இந்தியாவின் முழுநீளக்கதைப் படமாக புண்டாலிக் 1912ஆம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் எடுக்கப்பட்டது.இதைத் தயாரித்தவர் வெளினாட்டவர் என்பதால் இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை இது பெறவில்லை

இந்தியாவின் முதல் சலனப்படம் ஹரிச்சந்திரா.1913ஆம் ஆண்டு துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் தயாரிக்கப் பட்டது.

இதனால் தாதா சாகிப் பால்கே இந்தியத் திரைப்படத் தந்தை என போற்றி புகழப்படுகிறார்.இப்படம் சென்னை கெயிட்டித் தியேட்டரில் திரையிடப்பட்டது.

இதை கார் வியாபாரம் செய்து வந்த நடராஜ முதலியார் பார்த்தார்.அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டது. ஸ்மித் என்ற ஆங்கிலேயர் அவருக்கு தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார்.

நடராஜ முதலியார், தன் புதிய படபிடிப்பு நிலையத்தைக் கீழ்பாக்கத்தில் டவர் ஹவுஸ் என்ற பங்களா ஒன்றில் துவக்கினார்.இந்தியா ஃபிலிம் கம்பெனி என தன் ஸ்டூடியோவிற்கு பெயரிட்டார்

1916ல் சலனப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு கீசகவதம் என்ற படத்தை எடுத்தார்.

தமிழர் ஒருவரால் தயாரிக்கப் பட்ட முதல் சலனப் படம் இதுவே.35 நாட்கள் படபிடிப்பு.6000அடி படம்.35000 ரூபாய் செலவு

அடுத்தடுத்து 6 படங்களை இவர் தயாரித்தார் தமிழ்ப் பெண்கள் யாரும் சினிமாவில் நடிக்க முன்வராத நிலையில் முதலியார் தனது இரண்டாவது படமான ‘திரௌபதி வஸ்திராபரணம்’ படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்சனா என்ற பெயரையும் சூட்டினார்.

“விலைமாதர்கள் கூட சினிமாவில் நடிப்பதை அவமானமாகக் கருதினார்கள். அதனால் ஆங்கிலேயேப் பெண்மணியைத்தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டிவந்தது. அவருக்குப் படக் காட்சிகளை ஆங்கிலத்தில் விளக்கிக் கூற ரங்கசாமிப் பிள்ளை என்ற ரயில்வே ஊழியரை அமர்த்தினேன். அவரையே துச்சாதனனாகவும் அந்தப் படத்தில் நடிக்க வைத்தேன்” என்று பின்னாளில் பேட்டியளித்த நடராஜ முதலியாரைத் தமிழ்த் திரையும் தமிழ் மக்களும் மறந்தே போனார்கள்.

இவர் எடுத்த 6 படங்கள்..

திரௌபதி வஸ்திராபரணம்
கீசக வதம்
லவகுசா
ருக்மணீ சத்யபாமா
மார்க்கண்டேயா
காளிங்கமர்தனம்

அவர் ஒரு பேட்டியில்..

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மக்களின் பண்புள்ள எதிர்கால வாழ்க்கைக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடிய சாதனமாக திரைத்துறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுள்ளார்

1885ஆம் ஆண்டு பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு மறைந்தார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அயனாவரத்தில் வசித்துவந்த அவரது மகள் ராதாபாயின் வீட்டில் 87 வயது வரை அமைதியாக வாழ்ந்த முதலியார் 1971-ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் திரையுலகைச் சேர்ந்த யாரும் கலந்துகொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.