தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் பிறந்த தினம் இன்று

3

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார்.

செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலை யில் ஆர்வம் கொண்டிருந்தார்.

திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்துக் களங்களிலும் புகுந்து அவற்றையும் ஆர்வத்தோடு கற்றார்.

பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலித்த மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவரும் அங்கு படித்தார். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பி திரைப்படம் தயாரிக்கத் தொடங்கிய அவர், உதவிக்கு தனது கல்லூரி நண்பர் டங்கனை அழைத்தார்.

இந்தியா வந்த டங்கன், ‘நந்தனார்’ திரைப்படத்தில் நண்பருக்கு உதவியாளராக சேர்ந்தார். அதில் சில காட்சிகளையும் இயக்கினார். அவர் நண்பனை சிபாரிசு செய்ய, 1936-ல் ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரானார் டங்கன்.

தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும்.

எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே.

‘இரு சகோதரர்கள்’, ‘அம்பிகாபதி’, ‘சூர்யபுத்திரி’, ‘சகுந்தலா’, ‘மீரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ‘எ கைடு டு அட்வெஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்டார்.

90-களின் தொடக்கத்தில் தமிழகம் வந்த இவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நிய நாட்டின் மொழி, கலாச்சாரம், மக்களின் ரசனை, எதிர்பார்ப்பு குறித்து தெரிந்துகொண்டு, தனது தன்னிகரற்ற திறனால் சாதனை இயக்குநராக முத்திரை பதித்த எல்லிஸ் ஆர்.டங்கன் 92-வது வயதில் (2001) மறைந்தார்

Leave A Reply

Your email address will not be published.