எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமான தினம் இன்று!

1

கடலுார் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில், 1934 ஏப்., 24ம் தேதி பிறந்தவர் ஜெயகாந்தன்; இயற்பெயர், முருகேசன். 5ம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்றது. சென்னையில், ‘ஜனசக்தி’ அலுவலக அச்சகத்தில் பணியாற்றினார். அப்போது, புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்கள் கற்றார். ‘சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன், கல்கி, குமுதம்’ உள்ளிட்ட இதழ்களில், இவரது கதைகள் வெளியாகி, வரவேற்பை பெற்றன. சில நேரங்களில் சில
மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நுாறு பேர் உள்ளிட்ட இவரது படைப்புகள், திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன.

சில படங்களை இயக்கினார். 200 சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நுால்கள் எழுதியுள்ளார். இவரது படைப்புகள், உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சாகித்ய அகாடமி, ஞானபீடம்’ உள்ளிட்ட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.இலக்கியத்துக்காக, ‘பத்மபூஷண்’ விருது பெற்ற முதல் படைப்பாளி என்ற பெருமை பெற்றார். 2015 ஏப்., 8 ம் தேதி, தன், 81வது வயதில் இயற்கை எய்தினார்.

Leave A Reply

Your email address will not be published.