புரட்சி கலைஞர் விஜயகாந்த் அறிமுக படம் ’அகல்விளக்கு’ வெளியான நாள் இன்று

14

“புரட்சிக்கலைஞர்” என்றும் கேப்டன் என்றும் ரசிகர்களால அழைக்கப்படுபவர்
விஜயகாந்த். இவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான
“அகல் விளக்கு” திரைப்படம் வெளியான தினம் இன்று.
( 04 டிசம்பர் 1979 )

விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவரை மதுரை தொழிலதிபர் மர்சூக் என்பவரின் சிபாரிசின்பேரில் இயக்குனர் எம்.ஏ..காஜா “விஜயகாந்த்” என்று பெயர் மாற்றி இவரது இயக்கத்தில் 1979 ல் வெளியான சுதாகர் ராதிகா நடித்த “இனிக்கும் இளமை” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து இயக்குனர் ஆர் செல்வராஜ் தனது “அகல் விளக்கு” திரைப்படத்தில் பிரபல திரைப்பட நடிகை ஷோபாவிற்கு ஜோடியாக கதாநாயகனாக விஜயகாந்தை அறிமுகம் செய்தார். “அகல் விளக்கு” திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்து, அடுத்து 1980 ல் பிரபல திரைப்பட இயக்குனர் கே.விஜயனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த “தூரத்து இடிமுழக்கம்” ஓரளவிற்கு இவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது, இதன் பின்னர் 1981 ல் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் வெளியான “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. அன்றுமுதல் அவரது திரையுலக பயணம் ஏற்றத்திலேயே இருந்து வந்தது.  தற்போது தேமுதிக கட்சி தலைவராக இருக்கிறார் விஜயகாந்த்.

Leave A Reply

Your email address will not be published.