ரஜினிகாந்த் நாளை பிறந்த தினம்: இன்று முக்கிய ஆலோசனை..

13

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நாளை பிறந்த தினம். சமீபத்தில் அவர் இம்மாதம் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவதுபற்றி  அறிவிப்பதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாகவும் தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து போயஸ் கார்டனிலுள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது, புதிதாக நிர்வாகிகளை நியமிப்பது, தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சியை பதிவு செய்வது உள்ளிட்டவை குறித்து நடிகர் ரஜினிகாந்த் 4-வது முறையாக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினி நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.