ட்ரிப் (பட விமர்சனம்)

22

படம்:ட்ரிப்
நடிப்பு: யோகிபாபு, கருணாக ரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன், பிரவின்குமார் (அறிமுகம்), கல்லுரி வினோத், எம்.சித்து, ராகேஷ் (அறிமுகம்), லக்‌ஷ்மி, நான்சி ஜெனிஃப்ர், ராஜேஷ் (அறிமுகம்). அதுல்யா சந்திரா, மேக் மணி, சதீஷ், ராம்போ, நீத்தி வாசுதேவன், சத்யா, மூனிஷ்
இசை: சித்துகுமார்
ஒளிப்பதிவு: உதயஷங்கர்
தயாரிப்பு: சாய் ஃபிலிம்ஸ் ஸ்டுடியோஸ் அ.விஸ்வ நாதன், இ.பிரவின்குமார்
எழுத்து-இயக்கம்: டென்னிஸ் வி மஞ்சுநாத்

ஜாம்பி கதைகள் ஹாலிவுட்டை தாண்டி கோலிவுட்டுக்கு ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் ட்ரிப் நர மாமிசம் திண்ணும் பயங்கர மனிதர்களின் கதை யாக உருவாகி இருக்கிறது.
நண்பர் கூட்டம் ஒன்று கொடைக்கானலுக்கு புறப்பட ஹீரோவுக்கு வரும் போன் அழைப்புக்கு பிறகு காணமால் போன இருவரை தேடி கடவேரி காட்டுக்கு செல்கின் றனர். மனிதர்களை கொன்று திண்ணும் நடமாட்டம் உள்ள காடு என்று சொல்லப்பட்ட தும் கூடவே பயமும் தொற்றிக் கொள்கிறது. அடவேரி காட்டு பகுதியில் சுனைனா மற்றும் கூட்டாளிகளை நர மாமிச மனிதர்கள் அடித்து சாகடிக்கி ன்றனர். அந்த மாமிச மனிதர் களிடம் சிக்கிய சக நண்பர்கள் காட்டுக்குள் இடுந்து தப்பி னார்களா என்பதற்கு அதிர்ச்சி யான கிளைமாக் ஸுடன் பதில் சொல்கிறது ட்ரிப்.
ஆரம்ப காட்சியிலேயே இரண்டு பேர்களை கொன்று அடி இழுத்து செல்லும் அந்த கொடூர நர மாமிச மனிதர் களின் அறிமுகம் பின்னர் உச்சகட்டத்துக்கு செல்லச் செல்ல பயமும் இன்ச் பை இன்ச்சாக அதிகரிக்கிறது.
யோகிபாபுவும், கருணா கரனும்தான் மனித மாமிசம் திண்பவர்கள் என்று எண்ணி அவர்கள் இருவரையும் பார்த் ததும் சுனானாவும் நண்பர் களும் சிதறிகொண்டு ஓடுவது வேடிக்கை.
யோகிபாபுவும், கருணா கரனும் கமெண்ட் அடிப்பதும் காமெடி செய்வதுமாக தோன் றும்போதெல்லாம் ஒரே அலப் பறை செய்கின்றனர். இவர்கள் இருவரையும் தவறாக புரிந்து கொண்டு அவர்கள்தான் கொலைகாரர்கள் என எண்ணி பிரவின், ஜெனிஃபர் நட்பு கூட்டம் நய்ய புடைக்கிறது.
சுன்னைனாவுக்கு ஒரே காஸ்டியும்தான். வெறும் கட் பனியன் போட்டு பளிச்சென கவர்ச்சியாக வந்தாலும் அளந்து நடித்திருத்திருக்கி றார். பிரவின்குமார், ஜெனிஃபர். லட்சுமி ப்ரியா என எல்லா நடிகர்களும் காட்சி களை உணர்ந்து நடித்திருக் கின்றனர்.
நரமாமிசம் திண்பவர்களாக வருபவர்கள் திகில் கிளப்பு கின்றனர். அவர்களை கண்டு பயந்து ஓடிய பிரவின் ஒருகட்டத்தில் திடீரென்று அவர்களை தாக்கி அதிரடி காட்டுகிறார். சுனைனா பாய்ந்து தாக்கும் நாயுடன் தைரியமாக நடித்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம்.
பிரவின் குமாருக்கு அவ்வப் போது ஆக்ரோஷம் ஏற்பட்டு ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். உடன் நடித்திருக் கும் மற்றவர்களும் பொறுப் பை உணர்ந்திருக்கின்றனர்.


காட்டுக்குள்ளேயே படம் முழுவதும் படமாக்கப்பட்டி ருக்கிறது. காமெடிக்கு இடம் இருந்தாலும் காதல் டூயட்டுக் கெல்லாம் அதிகமாக இடம் தந்து போரடிக்காதது நலம்.
யார் இந்த நரமாமிச மனிதர்கள் என்பதற்கு பயோ விஞ்ஞான முறைப்படி விளக்கம் அளித்து நம்பவைக் கிறார்கள். படத்தின் ஆரம்பத் திலேயேயும் மனிதர்களை மனிதர்கள் அடித்து சாப்பிடுவ தற்கு ஒரு விளக்கம் அளிக்கப் படுகிறது அப்போதே மனிதர் களை பிடித்து திண்ணும் தாவர வகை செடி பற்றியும் ஒரு க்ளு தருகிறார் இயக்குனர்.
உயரமான அருவி. அடர்ந்து பரந்த காடுகளை கச்சிதிமாக படமாக்கி இருக்கிறது உதயசங்கர் கேமரா. சித்து குமார் இசை மாமிச மனிதர் களை காட்டும்போது பயமுறுத்துகிறது.
டென்னிஸ் மஞ்சுநாத் கதையை திசை திருப்பாமல் நேர்கோட்டில் கொண்டு சென்றிருப்பது அப்ளாஸ் பெறுகிறது. நர மாமிசம் திண்ணும் மனிதர்கள் கதை என்று வாயால் சொன்னாலே பீதி கிளம்பும் படத்தில் அந்த உணர்வை படரவிட்டிருக் கிறார் இயக்குனர்.

ட்ரிப்- திகில், த்ரில், திக் திக்.

Leave A Reply

Your email address will not be published.