தியேட்டருக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி அவசியம் உத்தரவை மறுபரிசீலனை செய்க

முதல்வருக்கு உதயா வேண்டுகோள்

1

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கனிவான கவனத்திற்கு நடிகர் உதயா விடுத்துள்ள வேண்டுகோள்:

பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரண மாகவும் விளங்கி வருகிறீர்கள்.

கொரோனாவை கட்டுப் படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கை களுக்கு மிக்க நன்றி.

தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம்.

கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகி றோம்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரை யரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள் கிறோம்.

ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரை யுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப் புள்ளது.

எனவே, எனது கோரிக் கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்ப தற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம். மிக்க நன்றி,

இவ்வாறு நடிகர் உதயா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.