உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1

லக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

விக்ரம் படத்தை கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படி பல ஜாம்பவான்கள் கமிட் ஆகி உள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் நிலையில் இன்று மாஸ் அப்டேட்டைக் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ். விக்ரம் உருவான விதம் தொடர்பான மாஸ் வீடியோவை வெளியிட்ட இயக்குநர் ஜூன் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக விக்ரம் படம் தியேட்டர்களில் வெளியாகும் என குறிப்பிட்டு உள்ளார்.

பட ரிலீஸ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்” உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த கமல்ஹாசன், ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டார். அவருக்கு பதில் அளித்த லோகேஷ், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே எனக் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.