சூட்ஸ்பா’வின் டீஸருக்கு அமோக வரவேற்பு

1

 

சோனி லிவ் மற்றும் மடோக் அவுட்சைடர் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணையத் தொடரான (வெப் சீரிஸ்) ‘சூட்ஸ்பா’வின் டீஸரை வெளியிட்டதிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

தலைப்புக்கு (அதீத தன்னம்பிக்கை) ஏற்ற வாறு தற்போது வெளி யிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டிரைலர், அனைவரின் வாழ்க்கை யிலும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டுகிறது. ஜென்-எக்சின் பிரபல நடிகர்களான வருண் ஷர்மா, மஞ்சோத் சிங், கவுதம் மெஹ்ரா, தான்யா மணிக்தலா, எல்னாஸ் நோரூசி மற்றும் க்ஷிதிஜ் சவுகான் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் உருவாகி யுள்ள ‘சூட்ஸ்பா’ இன்றைய காலக்கட்டத் தில் மனித அடையாளத் தை டிஜிட்டல் யுகம் எப்படி மாற்றியுள்ளது என்று கூறுகிறது.

சுருக்கமாக, இந்த வெப் சீரிஸ் ஒரு கேக் போன்றது, 5 வித்தியாசமான, சுவை யான கதைகளுடன் ‘இன்டர்நெட்’ என்று அழைக்கப்படும் சிறந்த கிரீம் கொண்டு இணைக் கப்பட்டுள்ளது.

வலை உலகின் சக்தியைக் காண்பிக்கும் இந்த டிஜிட்டல் நிகழ்ச்சி, இன்றைய இளைஞர்கள் மேல் அது செலுத்தும் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. ஏராளமான நகைச்சுவையுடனும், சார்பியல் காரணி களுடனும் கலந்த இந்த இணையத் தொடர் உங்களை உங்கள் ‘சூட்ஸ்பா’ வாழ்க்கையின் தருணங்களுக்கு அழைத்துச் செல்வது உறுதி.

நிகழ்ச்சியைப் பற்றி பேசிய வருண் ஷர்மா, “இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் உலகம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது, வலைதள உலகில் அங்கீகாரம் பெறுவதற் காக மக்கள் அவர்களை யே மாற்றி கொள்ளும் அளவிற்கு இது சக்தி வாய்ந்தது. சூட்ஸ்பா போன்ற அருமையான பொழுதுபோக்கு வெப் சீரிஸ் மூலம் எனது OTT அறிமுகத்தை பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகி றேன்,” என்றார்.

நடிகர் மஞ்சோத் சிங் கூறுகையில், “இது இணையத்தின் ஊடாக இணைக்கப்பட்ட ஐந்து நபர்களைச் சுற்றியுள்ள ஒரு சுவாரஸ்யமான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு கதை. நமது வாழ்க்கையின் சில ‘சூட்ஸ்பா’ தருணங் களுக்கு இது நம்மை அழைத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். எனது ஃபக்ரி குழுவுடன் மீண்டும் ஒன்றிணைந் ததில் பெரும் மகிழ்ச்சி. அதே போன்ற ஒரு அனுபவத்தை மீண்டும் ரசிகர்களுக்கு தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கி றோம்,” என்றார்.

ஜூலை 23 முதல் சோனி லிவில் ‘சூட்ஸ்பா’-வை காணலாம். தினேஷ் விஜன் தயாரித்த இந்த நிகழ்ச்சிக்கு அமித் பப்பர் மற்றும் மிருதீப் சிங் லம்பா ஆகியோர் கதை எழுதியுள் ளனர். இந்த நிகழ்ச்சியை மிருதீப் சிங் லம்பா உருவாக்கியுள்ளார் மற்றும் சிமர்பிரீத் சிங் இயக்கியுள்ளார். இந்தி தவிர, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் இது வெளி யாகும்.

ஜூலை 23 முதல் சோனிலிவில் ‘சூட்ஸ்பாவை’ காணத் தவறாதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.