தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரானார் உஷா ராஜேந்தர்

டி.ராஜேந்தர் கவுரவ ஆலோசகர்..

20

இயக்குனர்- தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் அச்சங் கத்திலிருந்து டி.ராஜேந்தர் தலைவர் பதவியை திடீ ரென்று ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர்  கூறும்பொது,’ ’பாரம் பரியமிக்க சென்னை செங்கல் பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் தலைவ ராக பொறுப்பு வகித்து வருகி றேன்.
எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பி களும், ஏனைய சங்க உறுப் பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனை யான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.
எனவே அவர்களின் கோரிக் கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத் தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்றார்
தற்போது  தமிழ்நாடு திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தின் தலைவராக உஷா ராஜேந்தர், கௌரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.