வி ( பட விமர்சனம்)

47

படம்: வி
நடிப்பு: ராகவ், ஆர்.என்.ஆர்.மனோகர், சபீதா ஆனந்த்,
தயாரிப்பு: ரூபேஸ்குமார்
இயக்கம்: டாவின்சி சரவணன்

திகில் மர்ம படங்களுக்கு எல்லையே கிடையாது. அந்த பாணியில் வந்திருக்கும் படம்தான் வி. காதல் ஜோடிகள் இணைந்தால் அவர் களுக்கு அருகில் இருப்பவர் களையே தெரியாது, எதிரில் என்ன வருகிறது என்பது தெரியாது. இப்படித்தான் 5 காதல் ஜோடிகள் சுற்றுலாவாக மோட்டார் சைக்கிளில் ஜாலி யாக புறப்படுகின்றனர். பின்னால் வரும் லாரிக்கு வழி விடாமல் போக்கு காட்டுகின் றனர். கடுப்பாகும் டிரைவர் லேசாக உரசிவிட்டு செல்கி றார். இருள் வந்துவிடவே நடுக்காட்டில் ஜோடிகள் ஒரு ஓட்டலில் தங்குகின்றனர். இதில் மர்மமன முறையில் ஒவ்வொருவரும் கொல்லப் படுகின்றனர். யார் கொலை செய்கிறார்கள்? ஏதாவது பேயின் வேலையா? என்ப தற்கு படம் பதில் சொல் கிறது.
படத்தில் ஹீரோ என்று பார்த் தால் ஒரே தெரிந்த முகம் ராகவ்தான் மற்ற எல்லோ ருமே புதுமுகங்கள். காட்சி களில் சஸ்பென்ஸ் வேண்டும் என்பதால் திடீர் திடீர் என்று திகில் கிளப்பி பயமுறுத்து கிறார்கள்.
ஒருவரின் பிறந்த நாள் தேதி யை ஒரு ஆப் தளத்தில் பதிவு செய்தால் அவர்களின் இறப்பு தேதி தெரியும் என்று சொல்லி ஐந்து ஜோடிகளும் தங்களது தேதியை அதில் பதிவு செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் இறப்பு தேதி வருகிறது. இதில் சூடு பிடிக்கிறது படம். இப்படத்தில் லாரியும் ஒரு பிரதான அமசமாக இடம் பிடித்திருப்பது கூடுதல் த்ரில். பைக் ரேஸ் காட்சி பிரமாத மாக படமாகி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் காட்சியை தொடர மாட்டர் களா என்ற எதிர் பார்ப்பை ஆக்‌ஷன் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் ஏற்படுத் துகின்றனர். எதிர்பாராத கதாபாத்திரங்களில் வருகின் றனர் சபீதா ஜோசப், ஆர்.என்.ஆர் மனோகர்,
காதல் ஜோடிகளில் 9 பேர் கொல்லப்படுகின்றனர் ஒருவர் மட்டும் தப்பிக்கிறார். கிளைமாக்ஸில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாம்.
டாவின்சி சரவணன் இயக்கி உள்ளார். நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் இயக்குனர், கேமரா மேன், இசை அமைப்பாளர் என எல்லோரிடமும் நன்கு வேலை வாங்கி இருக்கிறார்.
வி- திகில் கலந்த பரபரப்பு.

 

Leave A Reply

Your email address will not be published.