வாய்தா – திரை விமர்சனம்!

12

டிப்பு: நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர்

தயாரிப்பு: வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார்

இசை-லோகேஸ்வரன்

ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன்

இயக்கம்: மகிவர்மன்.சி.எஸ்

ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமம். அங்கு துணி சலவை செய்யும் தொழிலாளி மு.ராமசாமி. வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் மு.ராமசாமி மீது மோதி விடுகின்றன. அடிபட்டு கீழே விழுந்த ராமசாமிக்கு, வலது கையில் பலமாக அடிபடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவரை, ஊர் அரசியல்வாதி இழப்பீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார். ஏழ்மையில் இருக்கும் அந்த முதியவரும் அவரது மகனும் இதற்கு சம்மதிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராமசாமி மீது மோதிய இன்னொருவர் தனது அரசியல் செல்வாக்கை காண்பிக்கிறார். இது குறித்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சிலரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்தான்.அவர்கள் தங்களால் முடிந்தளவு இயல்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களை விட பின்னணி இசையில் படத்திற்குள் நம்மை ஒன்ற வைத்துள்ளார் இசையமைப்பாளர் லோகேஸ்வரன்.

ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.

சலவை தொழிலாளிகள் படும் கஷ்டத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் மகிவர்மன். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நீதிமன்றம் அவர்களுக்கு என்ன மாதிரியான ஒரு நிலையை உருவாக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளனர். ஒரு வழக்கின் தீர்ப்பு சரியான நேரத்திற்கு கிடைக்க வேண்டும், தீர்ப்பு தாமதமானால் அது ஏற்புடையது அல்ல என்று வாய்தா படத்தில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.

ஆக இந்த வாய்தா – கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின் இன்னொரு பார்வை

Leave A Reply

Your email address will not be published.