வாழ் (பட விமர்சனம்)

17

நடிப்பு: பிரதீப், பானு, ஸ்ரீஜா திவா, மயூரா, ஆரவ் கோகுல்நாத்.
இசை பிரதீப் குமார்
ஒளிப்பதிவு ஷெல்லே கேலிஸ்ட்
இயக்குனர்:அருண் பிரபு புருஷோத்தமன்
ரிலீஸ்: சோனி லைவ்
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிர்தீப் மீது காதல் கொண்டு அவரை விடாமல் துரத்தி காதலிக்கிறார் ஒரு பெண். அவர் மீது பிரதீபுக்கு ஏனோ காதல் ஏற்படவில்லை. இந்நிலையில் வேறு ஒரு பெண் மீது பிரதீப்புக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரோ திருமணம் ஆனவர். அந்த பெண்ணுடன் பிரதீப் பழகுகிறார். அது நெருக்கமாகிறது. இவர்கள் பயணம் யூகிக்க முடியாத திருப்பங்களாக செல்கிறது. இறுதியில் இவர்களில் நிலை என்ன என்பதை படம் விளக்குகிறது.
அருவி என்ற படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இப்படத்தைஇயக்கி இருக்கி றார். அருவி படத்தை எப்படி ஒரு மாறுபட்ட படமாக தந்தாரோ அந்த பாணியில் இதையும் ஒரு புது பாணி படமாக தர முயன்றிருக்கிறார். ஐடியில் பணிபுரிபவராக பிரதீப் நடித்திருக் கிறார், திருமணம் ஆன பெண்ணாக பானு நடித்துள்ளார்.
கதைப்படி பிரதிப்பை விட வயதில் மூத்தவரான பானு தனது சைக்கோ கணவர் தன் மகனை அடித்து துன்புறுத்துவதை தாங்க முடியாமல் கணவரை சாகடித்து உடலை ப்ரிட்ஜில் வைத்துவிட்டு தப்பிக்க எண்ணுகிறார். அதற்கு சரியான ஆளாக கிடைக்கிறார் பிரதீப். தோழிக்கு 75 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று அவரை உடன் அழைத்துச் செல்கிறார். இவர்கள் இருவருக்குள் நெருக்கம் அதிகரித்து கள்ளக் காதலாக மாறுகிறது.
நாயகன் பிரதீப் சில பல படங்களில் நடித்திருந்தாலும் இதில் சோலோ ஹீரோ என்பதால் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார். கள்ளப்பார்வையில் மோகதை சிதறவிடுகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
டிஜிட்டல் உலகில் கதிகலங்கிபோயிருக்கும் மனங்களை இயற்கையோடு வருடத்தில் ஒரு மாதமாவது மனம் லயித்திருக்க வேண்டும் என்பதை கதையின் உட்கருத்து உணர்த்துவது அருமை.
சென்னையில் தொடங்கும் பயணம் ராமேஸ்வரம் தொடர்வதும் இரண்டு வெளிநாடுகளில் பயணிப்பதுமாக ஒளிப்பதிவாளர் ஷெல்லே கேலிஸ்டின் கேமிரா ஸ்கோர் செய்திருக்கிறது.
அருண் பிரபு புருஷோத்தமனின் தனது 2வது படத்திலும் மசாலா என்று மாறிவிடாமல் வித்தியாசமான முயற்சியை தொட்ர்ந்திருக் கிறார். பிரதிப்குமார் இசை படத்துக்கு இதம்.
வாழ்- வாழ்க்கையின் யாதார்த்தம்.
===========

Leave A Reply

Your email address will not be published.