நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து ஆலோசனை..

இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்;

16

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை ’800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் முத்தையா முரளிதரன் வேடத் தில் விஜய் சேதுபதி நடிக்கி றார். அதற்கு எதிர்ப்பு எழுந் துள்ளது. இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பார்த்திபன் போன்றவர்களும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்தையா முரளிதரன் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அரசுக்கு ஆதராவாக இருந்தார்.

எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க வேண்டாம் என்று கேட்டிருந் தார்.
கவிஞர் வைரமுத்துவும் அப்படத்தில் நடிக்க வேண் டாம் என்று விஜய் சேது பதிக்கு ஆலோசனை கூறி உள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில்  எழுதியுள்ள கவிதையில்,’கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி. என குறிபிட்டுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.