வரிசி (திரைப்பட விமர்சனம்)

23

படம்: வரிசி

நடிப்பு: கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, அவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா, அனுபமா குமார்

இசை: நந்தா

ஒளிப்பதிவு: மிதுன் மோகன்

தயாரிப்பு:   ரெட் ப்ளிக்ஸ் பிலிம் பேக்ட்ரி, முயற்சி படைப்பகம்

இயக்கம்: கார்த்திக் தாஸ்

கார்த்திக் தாஸ், சப்னா தாஸ் இருவரும் சிறுவயதுமுதல் அன்பாக பழகுகின்றனர். இருவருமே ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள் என்றாலும் தங்களது திறமை மூலம் படித்து ஐ டி கம்பெனியில் பணி செய்கின்றனர். கார்த்திக் தாஸ் புதிய புதிய செயலிகளை கண்டுபிடிக்கிறான். ஐடி பெண்கள் திடீர் திடீரென்று கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு நடக்கும் கொலை சிபிஐ விசாரணைக்கு செல்கிறது. இந்நிலையில்தான் சப்னா தாஸும் கடத்தப்படுகிறார். இந்த விஷயத்தை அவரது காதலன் கார்த்திக்கிடம்  கடத்தல் சொல்லி மிரடடுகிறான்., அவரை உயிருடன் விடும்படி கெஞ்சுகிறார் கார்த்திக். ஆனாலு சப்னாவை சீரழித்து கழுத்தை அறுக்கிறான் கடத்தல்காரன். அதன்பிறகு நடப்பது என்ன? காதலியை சீரழித்தவனை கார்த்திக் தாஸ் எப்படி பழிவாங்குகிறார்? குற்றவாளியை சிபிஐ கண்டுபிடிக்கிறதா என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கார்த்திக் தாஸ் ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார். இருபொறுப்பையும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ஹீரோ என்றதும் 50 அடி பாய்ந்து 20 பேரை ஒரே  அடியில் வீழ்த்தும் சினிமா ஹீரோவாக இல்லாமல் தினம் தினம் நடைமுறையில் சந்திக்கும் இயல்பான இளைஞராக நடித்து கவர்கிறார்.

கார்த்திக், சப்னா இருவருக்கும் தனிமையில் அதிகம் சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதை சாக்காக வைத்து சிலுமிசம் செய்து முகத்தை சுழிக்க வைக்காமல் உண்மையான காதல் ஜோடிகளாக வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். கடத்தல்காரனிடம் சப்னா சிக்கியதும் அவரை கொன்றுவிட வேண்டாம் என்று ஹீரோ கெஞ்சுவதும், என் உடம்பை எடுத்துக்கொள் ஆனால் என்னை உயிருடன் விட்டுவிடு நான் காதலனுடன் வாழ வேண்டும் என்று சப்னா அழுது துடிப்பதும் நெஞ்சை கனமாக்குகிறது.

கார் டிரைவர்தான் கடத்தல்பேர்விழி என்ற உண்மை தெரியவரும்போது ஷாக் பரவுகிறது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு வில்லனத்தனம் செய்து யார் இந்த நடிகர் என கேட்க வைக்கிறார் பாலாஜி.

அனுபாமா அனாதை இல்லம் நடத்துபவராக வந்து குழந்தைகள் மீது பாச மழை பொழிகிறார். மதுமிதா அவ்வப்போது தலைகாட்டி இளஞ்ஜோடிகள் கொஞ்சுவதை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு  சிரிக்க வைக்கிறார். 2வது ஹீரோவாக அவிஸ் மனோஜ். சிபிஐ அதிகாரியாக கிருஷ்ணா நடித்துள்ளனர்.

ஹீரோ இயக்குனர் என்ற இரண்டு பொறுப்பையும் கச்சிதமாக செய்திருக்கிறார்கார்த்திக் தாஸ் . மிதுன் மோகன் ஒளிப்பதிவு பளீர். நந்தா இசையில் பாடல்கள் தாலாட்டுகிறது.

ரெட் ப்ளிக்ஸ் பிலிம் பேக்ட்ரி சந்திரசேகர் எம்,, முயற்சி படைப்பகம் தயாரித்திருக்கின்றனர்.

வரிசி – பெயருக்கு ஏற்றார் போன்று வித்தியாசமான படம்.

 

Leave A Reply

Your email address will not be published.