நட்சத்திரங்கள் கீழிருந்து மேலே உயர்வார்கள். இவர் விமான பணிப்பெண்ணாக பறந்துக்கொண்டிருந்தவர், நட்சத்திரமாக நடிக்க கீழே வந்தார். காதலிக்க நேரமில்லை மூலம் அறிமுகமானவர்! கண்டிப்பான பெற்றோர் நடிக்கக்கூடாது என்று கூற, ஸ்ரீதரும் கோபுவும் நேரே சென்று, அவரது தந்தையிடம் பேசி சம்மதம் கூற வைத்தனர்.
எம்ஜிஆர் சிவாஜி என்று பெரிய தலைகளுடன் நடித்தாலும், தெருவில் சாதாரணமாக நடந்து செல்பவர். பிரார்த்தனைக்காக ஒரு ஆலயத்தை சுத்தம் செய்ய, அவர் நடுத்தெருவில் இருப்பதாக ஒரு பத்திரிகை எழுதியது. அதனை மறுக்க கூட அவருக்கு தெரியவில்லை. அவ்வளவு வெள்ளை மனசு. அப்படிப்பட்ட நடிகைதான் இன்று முப்பது கோடி பெறுமானமுள்ள தனது ஜி என் செட்டி ரோடு நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்தார். விளம்பரம் கூட தேடிக்கொள்ளவில்லை. அந்த நிலத்தில் பத்மாவதி தாயார் ஆலயம் எழுப்பப்போவதாக டிடிடி அறிவித்துள்ளது.
நான்கு படங்கள் நடித்ததுமே, விளம்பரம் செய்து கொண்டு, பெரிய மேதாவிகளாக ட்வீட் செய்யும் காலத்தில்தான், இப்படி ஒரு நடிகை வாழ்கிறார். இவரது அறிவுத்திறனுக்கும், ஆங்கில புலமைக்கும்,, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, என்று பன்மொழி பேசும் திறமைக்கும், எம்எல்ஏ, எம்பி ஆகி அமைச்சராக திகழ வேண்டியவர். தனக்கு இருக்கும் தொடர்புகளை கொண்டு, நிச்சயம் ஆகியிருக்கலாம். என்டிஆர், நாகேஸ்வரராவ், எம்ஜிஆர் சிவாஜி ஜெயலலிதா என்று அத்தனை தலைவர்களும் இவருடன் உரிமையுடன் பேசியவர்கள்தான். ஆனால் இறைத்தொண்டை தவிர எதுவும் வேண்டாம் என்று இருப்பவர் என்பதை மிக பெருமையுடன் கூறி கொள்கிறேன்