’வீரபாண்டிய கட்டபொம்மன்’ நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மரணம்

ஜாக்ஸன் துரையாக நடித்தவர்..

20

நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனாகவே சிவாஜி இப்படத்தில் வாழ்ந்திருப்பார். படத்தில் ஒவ்வொரு காட்சியும் மறக்க முடியாத காட்சிகள். பிரிட்டிஷ் வெள்ளைக்கார ஜாக்ஸன் துரையாக சி.ஆர்.பார்த்திபன் நடித்திருப்பார்.

சிவாஜியை வரவழைத்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு கிஸ்தி கட்டவில்லை, திரை கட்டவில்லை, வரி கட்டவில்லை, வட்டி கட்டவில்லை என்று கோபத்துடன் கேட்பார். உடனே சிவாஜி கிஸ்தி திரை வரி வட்டி யாரைக் கேட்கிறாய் கிஸ்தி யாரைக்கேட்கிறாய் வரி..  என்று ஆவேசமாக நீண்ட வசனம் பேசி பதில் அளிப்பார். அந்த காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பிடித்த  முக்கிய காட்சி.

இக்காட்சியில் நடித்தவர் நடிகர் சி.ஆர்.பார்த்திபன். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வீட்டில் ஒய்வில் இருந்தார். இந்நிலையில் திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக அவர் நேற்று காலை மரணம் அடைந்தார்.
மறைந்த பார்த்திபனுக்கு வனஜா என்ற மனைவி, ராம் மோகன், நாராயணன் கோபிநாதன், ரங்க ராமானுஜன் என்ற மகன்களும் ரஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
வாழ்க்கை குறிப்பு:
இவரது சொந்தா ஊர் வேலூர். கடந்த 25 வருடமாக சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். 120க்கும் மேற்பட்ட பங்களில் நடித்திருக்கும் இவர். எம்ஜிஆருடன் இதயக்கனி, சங்கே முழங்கு என 10 படங்களில் நடித்திருப்பதுடன் சிவாஜியுடன் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ஆலய மணி உள்ளிட்ட 16 படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக சின்ன வாத்தியார் படத்தில் நடித்தார். இப்படம் கடந்த 1997ம் ஆண்டு திரைக்கு வந்தது.
சி. ஆர். பார்த்திபன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் பார்த்திபன் இறுதி சடங்குகள் நடந்தன,

Leave A Reply

Your email address will not be published.