வீட்ல விசேஷம் -விமர்சனம்

10

டிகர்கள்: RJ பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் மற்றும் பலர்.

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார்

எடிட்டிங்: செல்வா RK

தயாரிப்பு: போனி கபூர்

இயக்கம்: RJ பாலாஜி, N.J.சரவணன்.

ரயில்வே ஊழியராக இருக்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் தாயின் கர்ப்பத்தை ஆர்.ஜே.பாலாஜி ஏற்றுக் கொண்டாரா? காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஹீரோ ஆர்ஜே பாலாஜி தனக்கே உரிய காமெடி, கிண்டல் பாணியில் இயல்பாக நடித்துள்ளார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார், நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளார். நடிப்பில் ஸ்கோர் செய்தே பேர் வாங்கிய ஊர்வசி அம்மாவாக – அதுவும் முதுமையிலும் இளமை கொப்பளிக்க வாழ்ந்திருக்கிறார். கூடவே அப்பாவாக வரும் சத்யராஜ் இந்தப் படத்திலும் வழக்கம்போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அதேபோல், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

50 வயதில் கர்ப்பம் அடைவதை, இந்த சமூகம் வேறு நோக்கத்தில் பார்க்க பட்டதை சுட்டிக்காட்டி, அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன். குறிப்பாக பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டுகள். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் வீட்ல விசேஷம் — முழுமையான பொழுதுபோக்கு

Leave A Reply

Your email address will not be published.