வெங்கட் பிரபு -வின் ’மன்மத லீலை’படத்துக்கு ஏ சான்றிதழ்!.

0

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ’மாநாடு’. இதை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். ‘டைம் லூப்’ வகை கதையை கொண்ட இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, மன்மதலீலை என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். திருமணத்துக்கு பிந்தைய காதலை சொல்லும் கதையாக இது உருவாகி இருக்கிறது. இதில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் எண்டர்டைன்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தை தணிக்கை குழு சமீபத்தில் பார்த்தது. படத்துக்கு `ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.