காளிதாசுக்கு விஜய் பாராட்டு

15

பாவக் கதைகள் வெப்சீரிஸில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகிய 4 இயக்குனர்கள் 4 எபிசோடுகளை இயக்கி இருந்தனர். அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் என்ற கதையில் சாந்தனு, காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் ஜெயராமின் மகனாக காளிதாஸ், இந்தக் கதையில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸிசை பார்த்த விஜய், காளிதாசை சமீபத்தில் தனது வீட்டிற்கு அழைத்தார். தங்கம் கதையில் சிறப்பாக நடித்ததாக அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ இணையதளத்தில் வைராகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.