விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத்தின் லைகர்

கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு

0

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி இந்திய திரைப்படமான
LIGER ( saala Crossbreed )படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, கோவாவில் துவங்கியது.

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டிருக்கிறது. படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது.

( இரத்தம் தெறிக்கும் வன்முறை இன்று முதல் ஆரம்பம் ) BLOOD SWEAT VIOLENCE begins today .. #shootmode #beastmode #LIGER #salaacrossbreed @TheDeverakonda #purijagannadh @ananyapandayy @karanjohar @PuriConnects @DharmaMovies @apoorvamehta18 @IamVishuReddy @meramyakrishnan @RonitBoseRoy ,” என டிவிட் செய்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சார்மிகவுர் இதனுடன் படத்தின் உருவாக்க பின்னணி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான போஸ்டரில் விஜய் தேவரகொண்டா ஒரு MMA குத்து சண்டை வீரராக பார்த்து ரசித்திருப்பீர்கள். தற்போதைய படப்பிடிப்பில் உலக நாடுகளை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடனான சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளது

நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் சிறப்பு பயிற்சி எடுத்து, இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.

Puri connects நிறுவனத்துடன், இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions இணைந்து தயாரிக்கிறது.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Leave A Reply

Your email address will not be published.