புதிய படம் அறிவிப்பு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்

16

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள அவரது 65-வது படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தன. இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிபார்ப்பு நிலவியது. இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், அஜய் ஞானமுத்து, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது உறுதியானது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் பட்ஜெட்டை குறைப்பதன் ஒரு பகுதியாக முருகதாஸ் சம்பளத்தை குறைக்கும்படி தயாரிப்பு தரப்பில் வற்புறுத்தியதாகவும் அதை ஏற்காமல் அவர் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல் பரவியது.

இந்தநிலையில் விஜய்யின் புதிய படத்தை நெல்சன் இயக்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கி பிரபலமானவர். தற்போது சிவகார்த்திக்கேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

இந்த படத்துக்கு ‘டார்கெட் ராஜா’ என்று பெயர் வைத்து இருப்பதாக போஸ்டர் கசிந்துள்ளது. இந்தப் போஸ்டரை உண்மை என்று நம்பி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இது அதிகாரபூர்வ பெயர்தானா என்பதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

Leave A Reply

Your email address will not be published.