விஜய் பனையூர் வீட்டில் ரசிகர்களுடன் ரகசிய ஆலோசனை..

14

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கடந்த மாதம் விஜய் மன்றம் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்தார். இதற்கு விஜய் ஆட்சேபனை தெரிவித்தார். என் தந்தை கட்சி பதிவு செய்தது எனக்கு தெரியாது, அவரது கட்சியில் இணையவோ, கட்சி பணியாற்றவோ கூடாது என தனது ரசிகர்கள்களுக்கு விஜய் தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்யின் பனையூர் பண்ணை வீட்டில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று குவிந்தார்கள். ஊடகங்களுக்கு இந்த தகவல் கசிந்ததால் விஜய் ஆலோசனை கூட்டத்தில் பங்கேறக்கவில்லையாம். இதனால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி போனதாக ஒரு தகவல் வெளியானது.  ஆனால், ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி வாயிலாக பேசியதாகவும். காணொலியில் பேசிய விஜய், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறுமுன்னு மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்தாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.