புற்றுநோய் பாதித்த நடிகருக்கு விஜய் சேதுபதி-சவுந்தர ராஜா உதவி

15

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களி காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் தவசி. இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

உணவுக்குழாயில் தொற்று ஏற்பட்டு புற்று நோய் சிகிச்சை பெற்று
வரும் நடிகர் தவசிக்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஒரு இலட்சமும், நடிகர் சௌந்தரராஜா பத்தாயிரமும் வழங்கினர்

Leave A Reply

Your email address will not be published.