’800’ படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகினார்.. முத்தையாவுக்கு நன்றி வணக்கம் சொன்னார்..

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

21

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க் கை படமாக உருவாகிறது 800. முத்தையா வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இலங்கையில் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங் கை அரசுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் குரல் கொடுத்தார் எனவே அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் விலக வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைர முத்து, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் தமிழ் ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதை தடுப்பது முறையல்ல என்று சரத்குமார்  இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் குரல் கொடுத்தனர்.
தனது வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிப்பதற்கு விஜய் சேது பதிக்கு தமிழ்நாட்டில் எழுந் துள்ள எதிர்ப்பை அறிந்த முத்தையா  தனது  வாழ்கை படம் 800லிருந்து விஜய் சேது பதியை விலக்கிக்கொள்ள கேட்டு முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக் கிறார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ் நாட்டில்‌ சிலரால்‌ ஏற்படுத்தப் பட்டுள்ள சர்ச்சைகள்‌ காரண மாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்‌.
என்‌ மீதுள்ள தவறான புரித லால்‌ 800 படத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப் பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌ எனவே என்னால்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஒரு தலை சிறந்த கலைஞன்‌ பாதிப்படை வதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலை பயணத் தில்‌ வருங்காலங்களில்‌ தேவை யற்ற தடைகள்‌ ஏற்பட்டு விடக் கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளு மாறு அவரை கேட்டுக் கொள் கிறேன்‌.
ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒரு போதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை அதை அனைத் தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு, உத்வேகத்தையும்‌ மன உறுதி யையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதை யை திரைப் படமாக்க சம்மதித்தேன்‌ அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட் டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து
இந்த படைப்பை அவர்களி டத்தில்‌ கொண்டு சேர்ப்பார் கள்‌ என நம்புகிறேன்‌. இதற் கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறு வனம்‌ என்னிடம்‌ உறுதி அளித் துள்ள நிலையில்‌ அவர் கள்‌ எடுக்கும்‌ அனைத்து  முயற்சி களுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும்‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்‌ தமிழ்‌
திரைப்பட கலைஞர்களுக்கும்‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர் களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக் கும்‌ எனது மனமார்ந்த
நன்றிகள்
இவ்வாறு முத்தையா முரளி தரன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முத்தையா முரளிதரன் அறிக்கையை தனது டிவிட் டரில் பகிர்ந்து நன்றி, வணக்கம் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து அப்படத்திலிருந்து அவர் விலகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார்..

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது உருவபடத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனத  ஆறுதல்  தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி

800 படத்திலிருந்து விலகி விட்டீர்களா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்று பதிலளித்தார் நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்ததாக தான் அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு  விஜய்சேதுபதி தெரிவித்தார்.

தொல் திருமா:

விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகியது  குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள தகவலில்,’
விஜயசேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார்.
மு.முரளிதரன் விஜயசேதுபதியைப் புறந்தள்ளினார்.
அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார்.
அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார்.இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு’ என குறிபிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது உருவபடத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வருக்கு ஆறுதல் கூறினார். (படங்கள் அருகில்)

Leave A Reply

Your email address will not be published.