வாரம்தோறும் ஞாயிற்றுகிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த “தளபதி” மக்கள் இயக்கம் “!

0

மிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA பெரம்பலூர் மாவட்டத்தில் துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.