விஜய்யின் ‘மாஸ்டர்’ 13-ந் தேதி ரிலீஸ்

17

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தன. பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று நேரடியாக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை யொட்டி வருகிற 13-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் வரவேற்று உள்ளனர்.

நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய்யின் மாஸ்டர் படம் வருகிற 13-ந்தேதி வெளியாவது தியேட்டர் பிரியர்களுக்கு நல்ல செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து தியேட்டர் கலாசாரத்தை செழிக்க உதவுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை என்பதை உணர்வார்கள். பாதுகாப்பு முன்எச்சரிக்கையோடு தியேட்டரில் படத்தை பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

தற்போது தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மாஸ்டர் படம் வெளியாகும்போது இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அரசை வற்புறுத்தி உள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “மாஸ்டர் 13-ந்தேதி 700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும். 100 சதவீத இருக்கைக்கு அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.