கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ பட ட்ரைலர் உலகத் திரைப்பட விழாவில் ரிலீஸ் !

0

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கூட்டணியில் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. படத்தில் வயது குறைக்கும் டெக்னலாஜி பயன்டுத்தப்பட்டு இளம் வயது கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் மே 18-ம் தேதி உலகப்புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் வைத்து விக்ரம் படத்தின் ட்ரைலர் பிரம்மாண்டமாக வெளியிடப் பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் நடைபெறுகின்றன. விக்ரம் படத்தை உலகளவில் எடுத்துச் செல்ல அதிக முனைப்பு காண்பித்து வருகிறார் கமல்ஹாசன்.

வரும் ஜூன் 3-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.