கமல்ஹாசனின் “விக்ரம்” பட புது அவதாரம்

விஜய்சேதுபதி, பஹத் பாசில் மாறுபட்ட தோற்றம்

4

கமல்ஹாசன் தயாரித்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இப்படத்தின் தொடக்க விழா ஏற்கனவே நடந்தது. அப்போது டைட்டில்டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இப்படத்தில் கமல்ஹாசனின்  மாறுபட்ட தோற்றம் கொண்ட போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. அவருடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மாறுபட்ட தோற்றத்தில் போஸ்டரில் இடம் பிடித்துள்ளனர். இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் விக்ரம் பற்றிய சிறு அறிமுக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அது வருமாறு:

வீரமே வாகையைச் சூடும்.
மீண்டும் துணிகிறோம், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம்..

 

 

Leave A Reply

Your email address will not be published.