கமல் நடித்த விக்ரம் படம்.. கேரள உரிமையை கைப்பற்றிய டாப் புரொடியூசர்!

0

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படம் சம்பந்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளன.

Kamal Haasan starring Vikram Movie Kerala rights bagged by “Riya Shibu

Kamal Haasan starring Vikram Movie Kerala rights bagged by “Riya Shibu

இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kamal Haasan starring Vikram Movie Kerala rights bagged by “Riya Shibu

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னை யில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது.

Kamal Haasan starring Vikram Movie Kerala rights bagged by “Riya Shibu

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு விக்ரம் படத்தின் கேரள உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளார். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Kamal Haasan starring Vikram Movie Kerala rights bagged by “Riya Shibu

கமல் ஹாசன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.