கமல் நடிப்பில் தயாராகி வரும் ‘விக்ரம்’ பட வெளியீடு – மார்ச் 14ல் அறிவிப்பு!

1

மலின் வழக்கமான பிரமிப்பூட்டும் ஆக்சன் & அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை இப்படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

மேலும் இப் படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஸ்வஸ்திகா கிருஷ்ணன், ஷிவாணி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி டிரம் ஸ்டிக்கர் அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அணமையில் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கமல் மாஸ் லுக்கில் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வரும் மார்ச் 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு திரையரங்க வெளியீட்டு தேதியை அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமாகி இச்சேதியை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.