டாணாக்காரன் பட அனுபவம் குறித்து விக்ரம்பிரபு பேட்டி!

1

விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படம், காவல்துறையில் வேலைக்குச் சேருபவருகளுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி கால வாழ்க்கையைச் சொல்லும் படம். கல்லூரி மாணவர்களுக்கு நிகராக காவல்துறை பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரசியங்கள் உண்டு. வழக்கமான காவல்துறை படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகிறது. ஏப்ரல் எட்டாம் தேதி இப்படம் வெளியாகும் என்றார்கள்

இந்நிலையில் டாணாக்காரன் நாயகன் விக்ரம் பிரபுவிடம் “ இதற்கு முன்னரும் காவலாளியாக, நடித்துள்ளீர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்ட போது விக்ரம் பிரபு, “போலீஸ் ஆவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தேன். இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறும் போது, உண்மையிலயே இது போன்று நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவரிடம் இதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினீர்களா என கேட்டேன். பின்னர் தான் அவரே போலீஸில் இருந்துள்ளார் என எனக்கு தெரியவந்தது. படமும் நேர்த்தியாக வந்துள்ளது. மிகவும் ஆழமாக கதையை சொல்லியுள்ளார். படத்தில் இசையமைத்த ஜிப்ரான், கலைஇயக்குனர் ராகவன், கேமராமேன் மாதேஷ் என அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான அணியாக செயல்பட்டனர். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ஒரு உலகத்தினுள் சென்று வருவது போன்ற உணர்வை உங்களுக்கு படம் கொடுக்கும்” என்றார்.

படம் தியேட்டரில் வெளியாகவில்லை என வருத்தம் இருக்கிறதா ? என்று கேட்டதற்கு “படம் 2019-ல் முடிக்கபட்டு மூன்று லாக்டவுனில் நாங்கள் சிக்கினோம். இந்த முடிவை எடுத்தது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான். அவர் இந்த படத்துக்காக பொறுமையாக காத்திருந்தார். பின்னர் அவருக்கு இது லாபகரமானதாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான். படத்தை தியேட்டரில் பார்க்க நாங்களும் விரும்பினோம், அதற்காக பல மடங்கு உழைப்பை கொடுத்துள்ளோம். ஆனால் இப்போது அதைத்தாண்டி அதிகமான மக்கள் டீவியில் படத்தை பார்க்கும்படியான வாய்ப்பு உருவாகியுள்ளது” என்று சொன்னார்.

மேலும் இப்படதிற்கு எவ்வாறு தயாரானீர்கள் ? அடுத்தடுத்த படங்கள் பற்றி ?என்ரு கேட்ட போது “உடல் உழைப்பு அதிகமாக தேவைப்பட்ட ஒரு படம். போலீஸ்யாய் இருப்பதை விட, போலீஸ்யாய் ஆக போகிறவன் எப்படி இருக்க வேண்டும் என நான் தயார்படுத்தி கொண்டேன். கொஞ்சம் சவாலாக தான் படம் இருந்தது. கேமராமேன் எல்லாவற்றை சூப்பராக பதிவு செய்துள்ளார். படத்தின் பெயருக்கான காரணம் படத்தினுள் இருக்கிறது. படத்தில் என் பெயர் அறிவு. இந்த படம் பார்த்த பின்னர் போலீஸ் மேல் மரியாதை வரும். இதன் பிறகு பாயும் ஒலி நீ எனக்கு, டைகர் என்ற இரு படம் உள்ளது. தியேட்டரை தாண்டி, படம் எல்லரையும் சென்றடைவது முக்கியம். அது இந்த படத்திற்கு நடப்பது மகிழ்ச்சி.” என்று சொன்னார்

Leave A Reply

Your email address will not be published.