வெப் தொடரில் விமலா ராமன்

20

சமீபகாலமாக பிரபல நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஜெயலலிதா வாழ்க்கை கதையான குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்தனர். கரோலின் காமாட்சி வெப் தொடரில் மீனா நடித்துள்ளார்.

சூர்யா, சத்யராஜ், பிரசன்னா, விவேக், காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், பிரியாமணி, பூர்ணா உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

தற்போது நடிகை விமலா ராமனும் ‘பப் கோவா’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதில் பெண் போலீஸ் அதிகாரியாக வருகிறார். சம்பத்ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக், ஜோசப் ராஜ், தேவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

லட்சுமி நாராயணா இயக்குகிறார். அதி பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை மையப்படுத்தி இரண்டு வித்தியாசமான கோணங்களில் கதையை உருவாக்கி உள்ளனர்.

தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய் படத்தின் மூலம் அறிமுகமான விமலா ராமன், ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட படங்களிலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.