வினோதய சித்தம் (திரைப்பட விமர்சனம்)

39

படம்: வினோதய சித்தம்

நடிப்பு: சமுத்தரக்கனி, தம்பிராமையா, சஞ்சிதா,

ஒளிப்பதிவு: ஏகாம்பரம்

இசை: சத்யா

தயாரிப்பு: அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன்

இயக்கம்: சமுத்திரக்கனி

பெரிய நிறுவன பதவியில் இருக்கும் தம்பி ராமையா அவசரமாக எல்லா வேலை களையும் பார்ப்பவர். எந்நேரமும் ஆபிஸ் ஞாபகத்தில் குடும்பத்தில் அதிக கவனம் செலுத்துவ தில்லை. எந்த வேலைக்கும் நேரமில்லை என்று அவசரகதியில் பறக்கிறார். வெளியூர் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்  அவரது ஆன்மாவை அழைத்து செல்ல நேரம் சமுத்திரக்கனி வடிவில் வருகிறது. உடன் செல்ல மறுக்கும் ஆன்மா அவரிடம் கெஞ்சி கேட்டு 90 நாட்களுக்கு உயிருடன் இருக்கவும் அதற்குள் தனது மகள்கள், மகனுக்கு திருமணம் செய்துவிட்டு உடன்வருவதாக சமுத்திரக்கனிக்கு வாக்கு தருகிறார். அவரும் அனுமதி தருகிறார். அவர் நினைத்தபடி எல்லாம் நடக்கிறதா என்பதே கதை.

எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பலருக்கும் இப்படம் பெரிய படிப்பினையை கற்றுத் தந்துவிடும்.

பரசுராம் என்ற கதாபாத் திரத்தில் தம்பி ராமையா வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

டைம் இல்ல சீக்கிரம் போ, டைம் இல்ல அப்பறம் பேசலாம் என்று எப்போதும் அவசர கதியில் இருக்கும் தம்பி ராமையா விபத்தில் சிக்கி பலியான  பிறகு தான் இறந்துவிட்ட தையே அந்த ஆன்மா நம்ப மறுக்கிறது. அப்போது வரும் நெடிய உருவம் கொண்ட நேரம் (சமுதரக்கனி) அவர் இறந்துவிட்டதை புரியவைப்பதும்  அவரிடம் உயிர்பிச்சை கேட்டு மீண்டும்  வீட்டுக்கு திரும்பி வந்து தனது கடமைகளை அவசரமாக முடிக்க முயற்சிப்பதும் பரபரப்பு.

தன் மகள் சஞ்சிதாவுக்கு திருமணம் செய்து வைக்க  எடுக்கும் முயற்சிக்கு சஞ்சிதா ஒப்புதல் தராமல் தான் காதலித்தவருடன் வீட்டிலிருந்து வெளியேறு வது ஷாக்.

வாழ்க்கையில் தன் இஷ்டப்படி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் ராமையா மனம் வெதும்பி தவிப்பது கலங்க வைக்கிறது

எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு சூழல் இந்த படத்தில் வரும் காட்சி போல் இருக்கிறதே என உணரும்படியான விஷயங்கள் எல்லோர் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஶ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி என எல்லா பாத்திரங்களும் தன் பணியை கச்சிதமாக செய்திருக்கிறது.

அதிகம் பேசாமல் எல்லாரையும் ஆட்டுவிக்கும் நேரம் பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி அழுத்த மான நடிப்பில் கவர்கிறார்.

அபிராமி ராமநாதன், நல்லாம்மை ராமநாதன் படத்தை தயாரித்திருக் கிறார்கள். வித்தியாசமான ஒளிப் பதிவு மூலம் காட்சிகளை மனதில் பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.

சி. சத்யா ஒரு மாறுபட்ட இசையால் கட்டிப்போடு கிறார்.

வினோதய சித்தம் – வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும்.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.