இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால் 31

2

 

விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகும், விஷால்#31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாட்கள் நடைபெற்றது.

விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான விஷால்#31 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 10 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் நடைபெற்று வருகிறது.

அதிகார பலம் படைத்த வர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவா கிறது. படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்படும்.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங் களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கி றார். து.பா. சரவணன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப் பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்று கிறார்.

Leave A Reply

Your email address will not be published.