விஷால், ஆர்யா நடிக்கும் புதிய பட ஷெட்யூல்

23

நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. இன்னமும் பெயரடப்படாட்த இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும். 

இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவிருக்கிறார்.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.

தற்போது ஹைதராபாத் ஷூட்டிங்கில் 2 நாட்கள் மட்டுமே ஆர்யா நடித்திருக்கிறார். மீண்டும் சென்னையில் 16 நாட்களும், ஊட்டியில் 12 நாட்களும், 32 நாட்கள் மலேசியாவிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.

மலேசியாவில் நடைபெறும் 32 நாட்கள் படப்பிடிப்பு முழுவதிலும் ஆர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த லாக்டவுன் பீரியடில் மலேசியாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அனுமதியில்லை என்று மலேசிய அரசு சொல்லியிருக்கிறது. இப்போதைக்கு இந்தப் படத்தின் சென்னை, ஊட்டி ஷெட்யூல்கள் முடியவே அடுத்தாண்டு ஜனவரி ஆகிவிடும் என்பதால் அதற்குப் பிறகு மலேசியாவுக்கு செல்வதில் பிரச்சினையிருக்காது என்று தயாரிப்பாளர் தரப்பு எண்ணுகிறது.

Leave A Reply

Your email address will not be published.